லண்டனில் உள்ள கடற்கரையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் அதிகளவில் கூடியிருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
லண்டனில் அரசாங்கம் கொரோனா லாக்டவுன் விதிகளை தளர்த்தியுள்ள நிலையில் பூங்காக்கள், திறந்த இடங்களில் மக்கள் கூடுவது மீண்டும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் லண்டனின் Hillingdonல் உள்ள Ruislip Lido கடற்கரையில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நேற்று ஒன்று கூடியுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் அங்கு சூரியக்குளியல் போட்டனர்.
Police have been called to Ruislip Lido to reports of large group gathering. Please use common sense when it comes to social distancing. #Covid19UK pic.twitter.com/DFzLsrKYXb
— Hillingdon Police (@MPSHillingdon) May 25, 2020
அங்கு வெப்பநிலை அதிகரித்துள்ள நிலை அதை தணிக்கவே இவ்வாறு செய்துள்ளனர்.
இது குறித்து Hillingdon பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் கடற்கரைக்கு சென்ற அதிகாரிகள் அங்கிருந்த பொதுமக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறித்தினார்கள்.
இது தொடர்பான புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பொலிசார் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளனர்.
அதில், அதிகளவில் மக்கள் ஒன்றுகூடியதாக எங்கள் தகவல் தரப்பட்டது, சமூக இடைவெளி விடயத்தில் கொஞ்சம் பொது அறிவை பயன்படுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.




















