இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் இன்று (27) முற்பகல் 11 மணி வரை பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
பின்னர் அன்னாரின் பூதவுடல் கொழும்பு – இராஜகிரியவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.
அத்துடன் நாளை (28) நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
பின்னர் அங்கிருந்து கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கட்சித் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
அதன்பின்னர் அங்கிருந்து ரம்பொடையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் பூதவுடல் கொட்டகலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அனுஷியா சிவராஜா தெரிவித்தார்.



















