மின்னேரியா தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து ஹோமாகமை வைத்தியசாலைக்கு கொரோனா நோயாளிகளை அழைத்துச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன.
இதில் நான்கு அம்பியூலன்ஸ் வண்டிகளே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து கந்தலாண்டா என்ற பகுதியில் நேற்று மாலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
குவைத்தில் இருந்து வந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 பேர் இவ்வாறு 7 அம்பியூலன்ஸ் வண்டிகளில் ஹோமாகமை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவ்வாறு சென்ற 7 வண்டிகளில் 4 வண்டிகள் மோதியுள்ளன.
இதில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. மேலும் இவர்கள் அனைவரும் தற்போது ஹோமாகமை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.



















