ரஷ்யாவில் தன் காதலியை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, அவரது உடலை தள்ளு வண்டி ஒன்றில் வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் தெருக்களில் சுற்றிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனாவால் வேலையிழந்த Philip Grigoryev (26) என்பவருக்கும் அவரது காதலியான Arina (24)க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது குடிபோதையிலிருந்த Philip தனது காதலியை அடித்து உதைத்து, கயிறு ஒன்றினால் அவரது கழுத்தை நெறித்துக் கொலை செய்திருக்கிறார்.
பின்னர் அந்த உடலை மறைப்பதற்காக சுமார் ஒரு மணி நேரம் தெருக்களில் சுற்றியிருக்கிறார்.
தள்ளு வண்டி ஒன்றில் அந்த உடலை வைத்துக்கொண்டு அவர் சுற்றும் காட்சிகள் CCTV கமெராக்களில் சிக்கியுள்ளன.
தான் இருக்கும் வீட்டிலிருந்து 1,500 அடி தொலைவிலுள்ள மற்றொரு அடுக்கு மாடிக்கட்டிடத்திற்கு சென்ற Philip, லிப்ட் மூலம் 12ஆவது தளத்துக்கு சென்று, Arinaவின் உடலை அங்கு போட்டுவிட்டு திரும்பியிருக்கிறார்.
ஆனால், அவரது நண்பர் ஒருவர் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் Philipஐக் கைது செய்துள்ளனர்.
கொலை வழக்கு ஒன்று துவக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.