தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,182 மில்லியனாக அதிகரித்துள்ளது.
சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் ஒரு லட்சம் ரூபாவையும், பிலியந்தலை ஹெடிகம, ஸ்ரீ சுதர்ஷனாராமாதிபதி சங்கைக்குரிய நாகியாதெனியே பேமரத்ன தேரர் ஒரு லட்சம் ரூபாவையும், பிலியந்தலை வேவல, உத்யோகிபுர, ஸ்ரீ விஜயாராமாதிபதி மேல்மாகாண தலைமை சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய வேபன இர ஹேமாலோக நாயக தேரர் ஒரு லட்சம் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.
நிவிதிகல சாசனப் பாதுகாப்பு சபை அன்பளிப்பு செய்த ஒரு லட்சத்து 40ஆயிரம் ரூபாவை சங்கைக்குரிய கோங்பிடியே சுசீல தேரர் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்ததுடன், அதற்கான காசோலை தேரரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
Siam City Cement (Lanka) ltd நிறுவம் அன்பளிப்பு செய்த 05 மில்லியன் ரூபாவையும், பாணதுரை பிரதேச சபை நிதியத்திலிருந்தும் உறுப்பினர்களின் பங்களிப்பிலிருந்தும் வழங்கப்பட்ட 785,000 ரூபாவுக்கான காசோலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
NSBM ( National School of Business Management) நிறுவனம் 10 மில்லியன் ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளதுடன், அதற்கான காசோலையை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர்களான பந்துல குணவர்த்தன மற்றும் டலஸ் அழகப்பெறும ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
தபால் திணைக்கள பணிக்குழாமினரின் அன்பளிப்புடன் 20 மில்லியன் ரூபாவும், இலங்கை மன்ற பணிக்குழாம் அன்பளிப்புடன் 227453 ரூபாவும் நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த காசோலைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
பேண்தகு அபிவிருத்தி, வனசீவராசிகள் அமைச்சு பணிக்குழாம் 132743 ரூபாவையும், வனப் பாதுகாப்பு திணைக்கள பணிக்குழாம் 1,832,535 ரூபாவையும், வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பணிக்குழாம் 1,589,189 ரூபாவையும், தேசிய தாவரவியல் பூங்கா திணைக்கள பணிக்குழாம் 746,888 ரூபாவையும், தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிக்குழாம் 410,757 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளதுடன், அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவினால் குறித்த காசோலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
வெல்பல்ல, ரத்தலான – நாகம பண்டைய விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய பிபிலதெனியே தம்மப்பிய தேரர் ஒரு லட்சம் ரூபாவையும், South Asia Gateway Terminals தனியார் நிறுவனம் 2,225,982 ரூபாவையும், மாவனல்லை Ceylon Experts Recruitment @ Travel நிறுவனம் ஒரு லட்சம் ரூபாவையும் இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவையும், Spin Riders நிறுவனம் 105,000 ரூபாவையும், கொழும்பு 08 ஐ சேர்ந்த திருமதி Aban Pestonjee ஒரு லட்சம் ரூபாவையும், ஹெக்டர் கொப்பேகடுவை விவசாய ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் 250,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.
இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் தற்போதைய மீதி 1,182,013,690.09 ரூபாவாகும்.
உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர்.
காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www. itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும்.
0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.