கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 16 பேர் இன்று (மே 27) புதன்கிழமை நள்ளிரவு (11.55 மணி) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில் ஒரே நாளில் 150 பேர கொரோனா தொற்றில் இனங்காணப்பட்டமை இதுவே முதன்முறையாகும். நேற்று செவ்வாய்க்கிழமை 137 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 469ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.
இன்று 150 பேர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 53 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கடற்படைச் சிப்பாய்களும் 97 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.