பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு அகதிகளை கடத்திச் சென்ற போது, 39 பேர் உயிரிழந்த சம்பவத்தில், இல் து பிரான்சுக்குள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வியட்னாமைச் சேர்ந்த அகதிகள் 39 பேரை பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு கடத்திச் சென்ற போது அவர்கள் குளிர்சாதனப்பெட்டிக்குள் உயிரிழந்தனர்.
இதில், 31 ஆண்கள் 8 பெண்கள் என அகதிகள் அனைவரும் குளிரில் உறைந்து பலியாகினர்.
இதனால் இது தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் நேற்று இல்-து-பிரான்சுக்குள் 13 பேரை, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி, பெல்ஜியத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.