இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி, கடந்த 2005 ஆம் வருடத்தில் வெற்றிகரமான சாதனையை படைத்த திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகமானது தற்போது தயாராகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சந்திரமுகியில் இரண்டாம் பாகத்தை பொறுத்த வரையில் வேட்டையன் மற்றும் சந்திரமுகிக்கு இடையே நடைபெறும் மோதல்களை கதையம்சமாக கொண்ட காட்சிகள் இடம்பெறவுள்ளதாகவும், இதில் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
இதில் சந்திரமுகி வேடத்தில் மீண்டும் ஜோதிகா நடிப்பார் என்ற எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், ஜோதிகாவிடம் இது குறித்து விசாரிக்கையில் படம் தொடர்பாக நடிக்க அழைப்புகள் வரவில்லை என்றும், சிம்ரன் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், இயக்குனர் வாசுவின் சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் சிம்ரன் நடிக்க இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாகவும் இணையத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தாத நிலையில், துவக்கத்தில் சிம்ரன் சந்திரமுகி படத்தில் நடித்ததும், இதே சமயத்தில் கர்ப்பமானதால் படத்தில் இருந்து விலகி ஜோதிகா நடித்ததும் குறிப்பிடத்தக்கது.