பிரேசிலில் 11 வயது மகனை விஷம் வைத்து கொலை செய்து விட்டு, தாய் அவனின் உடலை பழைய வீடு ஒன்றில் ஒளித்து வைத்துவிட்டு, காணமல் போய்விட்டதாக நாடகமாடிய சம்பவம், விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பிரேசிலின் Rio Grande do Sul-ல் Planalto நகரில் இருக்கும் வீடு ஒன்றில் 11 வயது மதிக்கத்தக்க Rafael Mateus Winques என்ற சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இவரின் தாய் Alexandra Dougokenski மகன் காணமல் போய்விட்டதாக கூறி புகார் அளித்த 10 நாட்களுக்கு பின், சிறுவனின் சடலத்தை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், மகன் காணமல் போய்விட்டதாக புகார் அளித்த தாய் தான் கொலையாளி என்பது தான் அதிர்ச்சி தரும் தகவல், இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த மே மாதம் 16-ஆம் திகதி Alexandra Dougokenski தான் படுக்கையில் இருந்து எழுந்த போது மகன் காணமல் போய்விட்டதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதனால் அதிகாரிகள், அவர் வீட்டை விட்டு ஓடியிருக்கலாம் என்று அதிகாரிகள் மற்றும் புலனாய்வாளர்கள் நம்பியுள்ளனர்.
இதையடுத்து, கடந்த 22-ஆம் திகதி தடவியல் அதிகாரிகள் அவர் வீட்டை சோதனை செய்த போது, அங்கு இரத்தக் கறை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, Rafael Mateus Winques-ன் வளர்ப்பு தந்தை காரிலும் இரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரத்தம் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது, அதன் முடிவுகள் இன்னும் வராமல் இருந்தது.
இந்நிலையில், Rafael Mateus Winques-ன் உடல் கடந்த 25-ஆம் திகதி அதே பகுதியில், இவர்கள் குடும்பத்தின் பழைய வீட்டில் தாளில் மூடப்பட்ட நிலையில், கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின் நடத்திய தொடர் விசாரணையில், Alexandra Dougokenski கைது செய்யப்பட்டார்.
மகன் உணர்ச்சிவசப்பட்ட(emotional problems) பிரச்சினைகளால் அவதிப்பட்டதால் அவருக்கு வலுவான மருந்து கொடுத்த பிறகு இறந்துவிட்டதாகவும், இதைத் தொடர்ந்து அவனின் உடலை தாள் ஒன்றில் போர்த்தியபடி கொண்டு சென்று பழைய வீட்டில் போட்டதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர், இது கொலை என்றே தோன்றுகிறது. இருப்பினும் இது தொடர்பான வழக்கு விசாரணை, இதை தெளிவுபடுத்தும் என்று கூறியுள்ளார்.