அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல்.
ஒருவருக்கு மூல நோய் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் மலச்சிக்கல் முதன்மை காரணமாக இருக்கிறது.
வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும்.
கோடைக்காலத்தில் பைல்ஸ் பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள்.
பைல்ஸ் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கு சிகிச்சை மேற்கொண்டால், நிலைமை மோசமாவதை தடுக்கலாம்.
அந்தவகையில் பைல்ஸ் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், எந்த மாதிரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும், எந்தவகையாக உணவை சாப்பிட வேண்டும், தவிர்க்க வேண்டும் என இங்கு பார்ப்போம்.
டயட் திட்டம்:
அதிகாலை – வெதுவெதுப்பான நீர் + 1 டீஸ்பூன் ஆளி விதை, கற்றாழை ஜூஸ்/ அருகம்புல் ஜூஸ்
காலை உணவு – கோதுமை கஞ்சி/ வெஜ் உப்புமா/ வெஜ் சேமியா/ வெஜ் இட்லி/ ரொட்டி/ ஒட்ஸ்/ ஸ்டப்டு சப்பாத்தி/ சப்பாத்தி காய்கறிகள் அல்லது தால் உடன்.
காலை உணவிற்கு பின் – பழங்கள்/ பழச்சாறு/ ஹெர்பல் டீ/ இளநீர்/ தேங்காய் பால்/ எலுமிச்சை ஜூஸ்
மதியம் – சப்பாத்தி + கைக்குத்தல் அரிசி சாதம் + சாலட் + காய்கறி பொரியல் + பருப்பு / சிக்கன் (வாரம் ஒரு முறை)
சாயங்காலம் – வறுத்த கடலை/ சூப்/ சேமியா பாயாசம்/ மூலிகை டீ/ க்ரீன் டீ/ முளைக்கட்டிய பயிர்கள்
இரவு உணவு – சப்பாத்தி + காய்கறிகள் + பருப்பு
சாப்பிட வேண்டியவை
- கோதுமை, அரிசி, கைக்குத்தல் அரிசி, திணை, குதிரைவாலி, பக்வீட்
- ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, முலாம் பழம், அவகேடோ, பீச், பேரிக்காய், மாதுளை, அனைத்து வகையான பெர்ரி பழங்கள், அத்திப்பழம், மாம்பழம், லிச்சி, சீத்தாப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, சப்போட்டா, அன்னாசி, திராட்சை.
- சர்க்கரைவள்ளிக் கிழங்கு, இஞ்சி, செலரி, கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, முள்ளங்கி, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கேல், காளான், பசலைக்கீரை, கேரட், பட்டாணி, வெந்தயக் கீரை, உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய்
- கொழுப்பு குறைவான பால், டோஃபு, சீஸ், தயிர், யோகர்ட், மோர், காட்டேஜ் சீஸ்.
- சீரகம், மல்லி, மஞ்சள், சோம்பு, பட்டை, ஓமம்
- இளநீர், க்ளியர் சூப், கரும்பு ஜூஸ், வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப், க்ரீன் ஜூஸ், ஹெர்பல் டீ, கற்றாழை ஜூஸ், அருகம்புல் ஜூஸ், மோர், பால், மில்க் ஷேக்குகுள், ஸ்மூத்திகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஜூஸ்கள்
- முட்டை வெள்ளைக்கரு, வறுத்த கோழி, க்ரில் மீன், மட்டன், தோல் நீக்கப்பட்ட சிக்கன்
- பாதாம், உலர் திராட்சை, வேர்க்கடலை, வால்நட்ஸ், ஹாசில் நட்ஸ், பிஸ்தா, முந்திரி, பூசணி விதைகள், சியா விதைகள், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள், எள்ளு விதைகள் போன்ற அனைத்தையுமே சாப்பிடலாம்.
- பசுமாட்டு நெய், சூரியகாந்தி எண்ணெய், கனோலா எண்ணெய், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய், ரைஸ் ப்ரன் ஆயில்
சாப்பிட கூடாதவை
- சுத்திகரிக்கப்பட்ட மாவு வகைகள்
- அளவுக்கு அதிகமாக வாழைப்பழம், கேனில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகள்.
- கேனில் அடைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் உறைய வைக்கப்பட்ட காய்கறிகள்
- கொழுப்பு அதிகமான பால் மற்றும் க்ரீம், கொழுப்பு அதிகமான யோகர்ட், க்ரீம் சீஸ், கண்டன்ஸ்டு மில்க்
- சிவப்பு மிளகாய், மிளகு
- கொழுப்பு நீக்கப்படாத முழு பால் நிறைந்த பானங்கள், க்ரீம் வகை பானங்கள், கேன் சூப்புகள் மற்றும் டப்பாவில் அடைக்கப்பட்ட சூப்புகள், மது, கார்போனேட்டட் பானங்கள்
- பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த இறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கானாங்கெளுத்தி மீன், சுறா .
- க்ரீம், பாமாயில், தேங்காய் எண்ணெய், வெண்பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் உணவுகள், ஊறுகாய், செயற்கை சுவையூட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
தினமும் கடைபிடிக்க வேண்டியவை
- தினமும் சரிவிகித உணவு முறையை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
- நார்ச்சத்து அதிகமான உணவுகளை உண்ண வேண்டும்.
- பழச்சாறுகளுக்கு பதிலாக பழங்களைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
- உணவுகளைத் தவிர்க்கக்கூடாது. குறிப்பாக காலை உணவைத் தவிர்க்கக்கூடாது.
- தினமும் தவறாமல் குறைந்தது 8-10 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். தினமும் அதிகளவு நீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.