பாசிப்பருப்பு ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டிருக்கிறது. இவை சருமத்தை சுத்தம் செய்து பளிச் என்று வைக்க உதவுகிறது.
பாசிப்பருப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் கரும்புள்ளி, சுருக்கம், கருமை ஆகியவை மறைந்து சருமம் பிரகாசமடையும்.
அதுமட்டுமின்றி இது முகத்தில் இறந்த செல்களை நீக்கவும், சன் டான் நீங்கவும், முகப்பருக்களை வெளியேற்றவும், முகத்தை பளபளப்பாகவும் வைத்திருக்க உதவி புரிகின்றது.
அந்தவகையில் தற்போது பாசிப்பருப்பை எப்படி முகத்திற்கு எல்லாம் பயன்படுத்தாம் என இங்கு பார்ப்போம்.
- இரண்டு டீஇஸ்பூன் அளவு பாசிப்பயறு இரவில் ஊறவைத்து மறுநாள் அதை மிக்ஸியில் நன்றாக அரைத்துவிடுங்கள். நன்றாக மைய அரைத்து அதில் கெட்டித்தயிர், 5 துளி பன்னீர் சேர்த்து கலந்து விடுங்கள். இதை முகத்தில் கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழிந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இரண்டு நாளைக்கு ஒருமுறை இப்படி செய்து வந்தால் முகத்தின் நிறம் மேம்படும்.
- இரண்டு டீஸ்பூன் அளவு பச்சைபயறை காய்ச்சாத பசும்பாலில் ஊறவைத்து மறுநாள் அந்த பாலை கொண்டு அரைக்கவும். மைய அரைக்க வேண்டும் . இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். பாசிப்பருப்பில் இருக்கும் ஊட்டசத்துகள் சருமத்தை ஈரப்பதமாக மென்மையாக வைத்திருக்க உதவுகின்றன.
- பருக்கள் வராமல் தவிர்க்க 4 டீஸ்பூன் அளவு பாசிப்பயறு ஊறவைத்து அரைத்து அதனுடன் வெண்ணெய் அல்லது நெய் 2 டீஸ்பூன் அளவு சேர்க்கவும். கற்றாழை சாறையும் 2 டீஸ்பூன் அளவு சேர்க்கவும். இப்போது அதை பேஸ்ட் பதத்துக்கு குழைக்கவும். முகத்தில் மசாஜ் போன்று கீழிருந்து மேல் நோக்கி தடவ வேண்டும். பிறகு கைகளால் வட்டவடிவில் மசாஜ் செய்தபடி முகத்துக்கு இலேசாக அழுத்தம் கொடுக்கவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்துவந்தால் போதும்.
- பாசிப்பயறை ஊறவைத்து பேஸ்ட் போல் அரைக்கவும். அதில் மஞ்சள் தூள், தயிர், எலுமிச்சை தோல் பொடி கலந்து நன்றாக பேஸ்ட் போக் குழைத்து கொள்ளவும். தயிருக்கு பதிலாக பால் சேர்க்கலாம். இதை முகத்தில் முடி இருக்கும் இடங்களில் உதடு, தாடை, கீழ் தாடை பகுதியில் தடவி கொள்ளவும். பிறகு அவை நன்றாக உலர்ந்ததும் அதை காயவிட்டு பஞ்சை நீரில் நனைத்து துடைத்து எடுக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி செய்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் மேலும் வளராமல் தடுக்கப்படும்.