இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, கடவுள் நரபலி கேட்டதாக கூறி, நபர் ஒருவரை கோவிலில் தலையை வெட்டி கொன்ற பூசாரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கின் அமைந்துள்ள பிராமணி தேவி கோவிலில் பூசாரியாக இருப்பவர் சன்சாரி ஓஜா (72).
இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 52 வயது நபரை கோவில் சன்னதிக்குள் அழைத்து வந்து கடவுள் முன்னிலையில் அவரின் தலையை துண்டாக வெட்டி பலி கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் நேராக பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது போலீசாரிடம் சன்சாரி கூறுகையில், என் கனவில் பிராமணி தேவி அம்மன் வந்து நரபலி கேட்டதாகவும், அப்படி செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வரும் என கடவுளே சொன்னதால் தான் இப்படி செய்ததாகவும் அவர் வாக்குமூலம் வழங்கிய நிலையில் கைது செய்யப்பட்ட சன்சாரியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதேவேளை அக் கிராமத்தின் சுற்றளவில் ஒரு மா பழத்தோட்டம் தொடர்பாக இறந்தவருடன் சாமியார் நீண்டகாலமாக தகராறு செய்து வந்த நிலையில் அவரை கொன்றுவிட்டு, நாடகம் ஆடுவதாக ததாக பந்தஹுதா கிராமத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் போலீஸ் டி.ஐ.ஜி மத்திய ரேஞ்ச் ஆஷிஷ்குமார் சிங் கூறுகையில்.
சம்பவம் நடந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மறுநாள் காலையில் அவர் மீண்டும் நினைவுக்கு வந்தபோது அவர் சரணடைந்து குற்றத்தை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.