சஜித் பிரேமதாஸ உட்பட அவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த 99 உறுப்பினர்களின் உறுப்புரிமையை பறிப்பதற்கான ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு பூரண அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சித் தலைமையகமாகிய சிறிகொத்தவில் இன்று நண்பகலில் நடைபெற்றது.
இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்ட செயலாளர் சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.