தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
நேற்றைய கூட்டமே எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் குற்றஞ்சாட்டுவதாக அமைந்திருந்த நிலையில் இரா.சம்பந்தன் தனது அடுத்த நகர்வை ஆரம்பித்துள்ளார்.
இதுவரை தனக்கு பின்னராக எம்.ஏ.சுமந்திரன் என நகர்வுகளை முன்னெடுத்த இரா.சம்பந்தனை தந்தை செல்வநாயகத்தின் பேரனை முன்னிலைப்படுத்தி நகர்வுகளை முன்னெடுக்க இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்க தொடங்கியுள்ளது.
திருகோணமலையில் தங்கியுள்ள தந்தை செல்வாவின் பேரன் சந்திரகாசன் இளங்கோவையே முன்னிலைப்படுத்த டெல்லி அழுத்தங்களை பிரயோகிக்க முற்பட்டுள்ளது.
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இளங்கோ முற்பட்ட போதும் செல்வநாயகத்தின் பேரன் தேர்தலில் தோல்வியடைவதை விரும்பவில்லையென இரா.சம்பந்தன் நாசுக்காக காய் வெட்டிக்கொண்டார்.
போதிய முன்னாயத்தமின்றி இளங்கோவை களமிறக்க இரா.சம்பந்தன் விரும்பவில்லையென கூறப்படுகின்ற போதும் எம்.ஏ.சுமந்திரனின் அழுத்தங்களாலேயே காய் வெட்டிக்கொண்டதாக தெரியவருகின்றது.
தற்போதைய அரசியல் போக்கில் டெல்லி எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் நேற்று முன்னதின சந்திப்பில் இது குறித்து பேசியுள்ளனர்.
சுமந்திரன் விவகாரத்தில் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி, அதனால் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றி விலாவாரியாக பேசப்பட்டுள்ளது.
இதற்கிடையில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் இம்மானுவேல் ஆர்னோல்ட் சுமந்திரனின் மிகவும் நம்பிக்கைக்குரியவராக கடந்த காலங்களில் இருந்தார் சுமந்திரனின் அண்மைக் கால செயற்பாடுகளில் வெறுப்படைந்து சுமந்திரனிற்கு எதிர் நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுத்துள்ளார்.
சுமந்திரன் தமிழர்களின் போராட்டம் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் இரட்டை நிலைப்பாடு எடுப்பதால் தமிழ் இனம் பாரிய அழிவுப் பாதைக்கு செல்வதற்கு சுமந்திரன் காரணம் என சமீப காலமாக ஆர்னோல்ட்டை சந்திக்கும் மக்கள் ஆதங்கப் படுவதால் சுமந்திரன் தொடர்பில் தான் எடுத்த முடிவில் முழு நம்பிக்கையுடன் மக்களை சந்திப்பதால் பொதுமக்கள் – பொது அமைப்புக்கள் – இளைஞர் களகங்கள் – சமயத் தலைவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.