இந்தியாவில் பிச்சைக்காரியை இளைஞன் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் அனில். இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.
இவர் தனது முதலாளியின் உத்தரவின் பேரில் நடைபாதையில் வாழும் பிச்சைக்காரர்களுக்கு கொரோனா லாக்டவுன் சமயத்தில் உணவு வழங்கி வந்தார்.
அப்போது சாலை ஓரத்தில் பிச்சை எடுத்து வந்த நீலம் என்ற பெண்ணை பார்த்துள்ளார் அனில். அவருக்கு உணவு வழங்கிய அனில் தினமும் அவருடன் பேசிய பழகிய நிலையில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இதையடுத்து இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது.
இது குறித்து நீலம் கூறுகையில், என் தந்தை இறந்துவிட்டதால் நான் என் அண்ணன், அண்ணியுடன் வசித்து வந்தேன்.
அப்போது என் தாய்க்கு பக்கவாதம் ஏற்பட்டது, இதனால் என்னையும், என் தாயையும் இருவரும் அடித்து வீட்டை விட்டு துரத்திவிட்டனர்.
என் தாயாரை காப்பாற்ற வேறு வழி தெரியாமல் பிச்சையெடுக்க ஆரம்பித்தேன், என்னுடையை நிலையை அனில் புரிந்து கொண்ட நிலையில் இருவரும் நட்பாகி, காதலர்களாகி தற்போது தம்பதிகள் ஆகிவிட்டோம் என கூறியுள்ளார்.
அனில் கூறுகையில், அவளுடைய தைரியம் எனக்கு பிடித்திருந்தது.
வீட்டிலிருந்து துரத்தப்பட்டாலும் மனம் தளராமல் தன் தாயை கவனித்து கொண்டது என்னை ஈர்த்தது, அதனால் நான் காதலில் விழுந்துவிட்டேன் என கூறியுள்ளார்.
அனில் – நீலம் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தம்பதியை வாழ்த்தியுள்ளதோடு, அனிலை பாராட்டி தள்ளியுள்ளனர்.