வெலிகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் வெலிகம – மிரிஸ்ஸவிலுள்ள மீன்பிடி துறைமுகமொன்றில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















