இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் விரைவில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதன்படி G Suite பயனர்கள் ஜிமெயில் ஊடாக ஆடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பினை வழங்கவுள்ளது.
ஜிமெயிலில் உள்ள இன்பாக்ஸ்சின் ஊடாக நேரடியாகவே இவ் அழைப்பினை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வசதியானது அறிமுகம் செய்யப்பட்டவுடன் ஜிமெயிலின் இன்பாக்ஸின் வலது பக்கத்தில் இதற்கான டூல்பார் தரப்பட்டிருக்கும்.
ஏனைய ஆடியோ அழைப்பு வெப் அப்பிளிக்கேஷன்களில் தரப்பட்டுள்ள டூல்களைப் போன்றே ஜிமெயிலில் தரப்படவுள்ள டூலும் காணப்படவுள்ளது.
இது தவிர ஆடியோ அழைப்புக்களை மொபைல் மற்றும் வெப் அப்பிளிக்கேஷன்களுக்கு இடையில் மாற்றிக்கொள்ளும் (Transfer) வசதியும் தரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.