மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.
வயிற்று பிடிப்பு, உடல் வலி, சோர்வு, மனச்சோர்வு போன்ற ஏகப்பட்ட பிரச்சினைகளை இந்தசமயங்களில் சந்திக்க வேண்டிருக்கும்.
அதிலும் சில உணவுகளை நாமும் மாதவிடாய் காலக்கட்டத்தில் சாப்பிடும் போது இன்னும் வயிற்றுவலியை ஏற்படுத்த கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக காரசாரமான உணவுகள் அல்லது அதிகமாக சாப்பிடும் போது அமிலத்தன்மை, பல குடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
அந்தவகையில் எந்தெந்த உணவுகள் பெண்களின் மாதவிடாய் காலத்தை மோசமாக்குகிறது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
- மிளகாய் உட்கொள்வது உங்கள் வயிற்று ஆரோக்கியத்தை மோசமாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வயிற்று புண்கள் மற்றும் வயிற்று வலி அதிகமாக வாய்ப்பு உள்ளது.
- பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாக்லேட் சாப்பிட விரும்பினால் கசப்பான சாக்லேட்களை தேர்வு செய்யுங்கள். மில்க் சாக்லேட் வேண்டாம். ஏனெனில் மில்க் சாக்லேட்டுகள் உங்க வயிற்று வேலையை மேலும் மோசமாக்கும். இதுவே டார்க் சாக்லேட் என்றால் வயிற்று பிடிப்பை குறைத்து விடும்.
- பிரெஞ்ச் ப்ரை அதிக கொழுப்புள்ள உணவுகளை மாதவிடாய் காலங்களில் சாப்பிட வேண்டாம். உருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. அது வயிற்று தசைகளை இறுக்க ஆரம்பிக்கும். மாதவிடாய் காலத்தில் அது கூடுதல் சிரமத்தை உண்டாக்கும்.
- பீட்சா இது சீரணிக்க அதிக நேரம் எடுப்பதனால் மாதவிடாய் காலங்களில் பீட்சா சாப்பிடுவதை தவிருங்கள். மைதா உணவுகள் ஜீரணத்தை தாமதப்படுத்தும். அதனாலும் மாதவிடாய் சமயத்தில் குளூட்டன் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
- சிவப்பு இறைச்சி அதிகப்படியான மந்தத்தையும் கூடுதலாக வயிற்றுப் பொருமலையும் ஏற்படுத்தும். அதனால் மாதவிடாய் காலங்களில் அதைத் தவிர்ப்பது நல்லது.
- மாதவிடாய் காலங்களில் பெண்கள் மது அருந்துவது நீரிழிப்பை உருவாக்கி கடுமையான தலைவலி மற்றும் வீக்கத்தை உருவாக்கும்.
- வெள்ளை அரிசிக்கு பதிலாக மாதவிடாய் காலங்களில் பழுப்பு அரிசியை தேர்வு செய்யுங்கள். மற்ற உணவுகளோடு கார்போ உணவுகளை இந்த சமயத்தில் தவிர்ப்பது நல்லது. அது மற்ற உணவுகளையும் ஜீரணிக்க வைப்பதைத் தாமதப்படுத்தும்.
- மாதவிடாய் காலங்களில் காபி குடிப்பது உங்களுக்கு வயிற்று போக்கை ஏற்படுத்தும். காபியில் உள்ள அதிகப்படியான காஃபினைன் தான் உங்களுடைய வயிற்றுத் தசைகளை இறுக்கி வலியை அதிகப்படுத்தும்.
- பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை இரண்டுமே மிக அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் கொண்டவை தான். ஆனால் மாதவிடாய் காலத்தில் அவை அதிகப்படியான வயிற்று வலியை உண்டாக்கும் என்பதால் அந்த சமயங்களில் அதைத் தவிர்ப்பது நல்லது.
- பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் வெள்ளை பிரட்டை தவிர்ப்பது நல்லது. பசைய உணவாக இல்லாமல், சிறு தானிய சிற்றுண்டி வகைகளை தேர்வு செய்யுங்கள். பசையம் உள்ள பிரட் வகைகள் உங்க மாதவிடாய் காலங்களை மோசமாக்க வாய்ப்பு உள்ளது.