இலங்கையில் நாளை முதல் ஹோட்டல்களில் திருமணம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது
மூன்றில் ஒரு பகுதியினரே திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்கு ஹோட்டல்கள் அனுமதிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் 1.5 மீற்றர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுற்றுலா துறை மீள் ஆரம்பிப்பதற்காக சுகாதார அதிகாரிகள் பல்வேறு சுகாதார ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.