ஐக்கிய அமீரகத்தில் பல வர்த்தக நிறுவனங்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பொருட்களை வாங்கிய இந்தியர் ஒருவர், அரசின் மீட்பு விமானத்தில் தப்பியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த நபர் இந்தியா திரும்பும்போது 6 மில்லியன் திர்ஹாம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து வந்துள்ளார்.
இந்தியரான 36 வயது யோகேஷ் அசோக் யாரியவா என்பவர் ராயல் லக் ஃபுட்ஸ்டஃப் ட்ரேடிங் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
இவர் மீது பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் ஐக்கிய அமீரகத்தின் அபுதாபி மாகாணத்தில் இருந்து மே 11 ஆம் திகதி இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் விமானத்தில் ஹைதராபாத் சென்றுள்ளார்.
இவர் ஐக்கிய அமீரகத்தில் பல வர்த்தக நிறுவனங்களில் இருந்து, சுமார் 50 லட்சம் திர்ஹாம் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் ஏமாற்றமடைந்த வர்த்தக நிறுவனங்கள் உள்ளூர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு முன்னெடுக்கப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.