அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் பொலிசாரால் மரணமடைந்த சம்பவம் ஒரு சில நாடுகளில் இருக்கும் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை கேலி செய்யும் விதமாக பிரித்தானிய இளைஞர்கள் இருக்கும் புகைப்படம் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் மோசடியில் ஈடுபட்டதாக கூறி George Floyd என்ற கருப்பினத்தவரை பொலிசார் கைது செய்ய முயன்றனர்.
ஆனால் தமக்கும் அந்த குற்றத்திற்கும் தொடர்பில்லை என George Floyd விளக்கமளித்தும், கைது செய்வதிலையே பொலிசார் குறியாக இருந்தனர்.
இந்நிலையில், பொலிசார் ஒருவர் தமது கால் முட்டியால் George Floyd-ன் கழுத்தில் அழுத்தி சுமார் 8 நிமிடங்கள் வரை கைதின் போது சித்திரவதைக்கு உள்ளாக்கினார். இதில் ஏற்பட்ட இதயம் தொடர்பான பிரச்சனைகளால் George Floyd மரணமடைந்தார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய நான்கு பொலிசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் முக்கியமான பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்போது கொலை வழக்கை எதிர்கொள்கிறார்.
கருப்பினத்தவர் உயிர் இழந்த சம்பவத்தால் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் போராட்டம், கலவரம் வெடித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து தற்போது பிரித்தானிய இளைஞர்களின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
அதில், George Floyd-ஐ பொலிசார் எப்படி தன்னுடைய கால் முடியால் அழுத்தியிருந்தனரோ, அதே போன்று இந்த இளைஞர்கள் சிரித்தபடி(ஸ்நாப் சாட்டில்) போஸ் கொடுத்திருந்தனர்.
பொலிசின் மிருகத்தனம் என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், அதை சிரித்தபடி செய்துள்ளனர். இது George Floyd-ன் மரணத்தை கேலி செய்யும் விதமாக இருப்பதாக கூறி, Warwick University freshers பேஸ் புக் பக்கத்தில் பகிரப்பட்டது.
18 முதல் 19 வயதிற்குட்பட்ட இவர்கள் இந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் பல்கலைக்கழகத்திற்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டதால், Warwick University இது குறித்து உடனடியாக விசாரணையைத் தொடங்கியது.
இது குறித்து பல்கலைக்கழகம் டுவிட்டர் பக்கத்தில், நேற்று பரப்பப்பட்ட ஒரு தாக்குதல் புகைப்படத்துடன் தொடர்புடைய நபர்கள் எவரும் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படவில்லை. அவர்கள் வரவேற்கப்பட மாட்டார்கள்.
இத்தகைய நடத்தை பல்கலைக்கழகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் அந்த இளைஞர்கள் யார்? எதற்காக இப்படி செய்தார்கள்? உண்மையிலே கேலி செய்வதற்காக இப்படி செய்தார்களா? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.