அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் பொலிசாரின் கைது நடவடிக்கையின் போது மரணமடைந்த நிலையில், அவருக்கு ஆதரவாக லண்டனில் நடந்த போராட்டத்தின் போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் மோசடியில் ஈடுபட்டதாக கூறி George Floyd என்ற கருப்பினத்தவர் கைது செய்யப்படும் போது, பொலிசாரின் சில மோசமான நடவடிக்கை காரணமாக உயிரிழந்தார்.
இதனால் George Floyd-வுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சில நாடுகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் போராட்டம், கலவரமாக மாறியது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று லண்டனில் George Floyd-வுக்கு ஆதரவாக சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இனவெறிக்கு இடமில்லை, George Floyd-க்கு நீதி வேண்டும், என்னால் மூச்சுவிட முடியாது போன்ற பாதைகளை கையில் வைத்திருந்ததுடன், கோஷமும் இட்டனர்.
லண்டனில் இருக்கும் அமெரிக்க தூரகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தின் போது, ஐந்து பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் அதிகாரிகளை தாக்கிய குற்றத்திற்காகவும், மூன்று பேர் கொரோனா வைரஸின் நடவடிக்கைகளை மீறியதற்ககாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைநகர் லண்டனில் அடுத்த வாரம் பல போராட்டம் நடைபெறவுள்ளதாகவும், வேல்சில் இன்று சிறிய அளவில் போராட்டம் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிசார் தன்னுடைய முழங்காலில் George Floyd-ன் கழுத்தில் வைத்து தொடர்ந்து அழுத்தியதன் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அப்போது George Floyd என்னால் மூச்சு விட முடியவில்லை, விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினார்.
அந்த வார்த்தையே இன்று லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் அதிகம் உச்சரித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் Derek Chauvin, Thomas Lane, Tou Thao, மற்றும் J. Alexander Kueng போன்ற நான்கு பொலிசாரும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு பொலிஸ் அதிகாரி கொலை வழக்கை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.