இந்தியாவில் 14 வயது சிறுமி வயிற்றுவலியால் துடித்த நிலையில் பரிசோதனையில் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
தெற்கு காஷ்மீரை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி வந்தது. இதையடுத்து சிறுமியை அவர் தந்தை அழைத்து கொண்டு மந்திராவாதியிடம் சென்றுள்ளார்.
அவர் எதோ பூஜை செய்த நிலையிலும் சிறுமிக்கு தொடர்ந்து தாங்க முடியாத வயிற்று வலி இருந்து வந்தது.
பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த விடயம் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியளித்த நிலையில் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர். பொலிசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதன்படி சிறுமியின் வீட்டருகில் வசிக்கும் அவரின் 35 வயது உறவினர் அடிக்கடி சிறுமி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு சிறுமி தனியாக இருக்கும் போது மயக்க மருந்து கலந்து கொண்டு அவரை தொடர்ந்து சீரழித்து வந்திருக்கிறார்.
மேலும் இதை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியும் உள்ளார், இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது
இந்த விடயத்தை எல்லாம் குற்றவாளி பொலிசில் வாக்குமூலமாக கொடுத்துள்ள நிலையில் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.