மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களிடமிருந்து யாருக்கேனும் கொரோனா பாதிக்கப்பட்டதாக நபர்கள் புகாரளிக்கப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கையெடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிகையினை இலங்கை பொதச்சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான விடுத்துள்ளார்.
அத்துடன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்களில் ஒரு புதிய நோயாளி அடையாளம் காணப்பட்டால், தேசியளவில் மற்றும் சர்வதேசளவில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டதற்காக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளின கடமைகளை இடையூறு, தொந்தரவு செய்யும் நபர்களுக்கெதிராக சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டார்.