தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நிகழ்வு இன்று முற்பகலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்பாக இடம்பெற்றது.
இந்த அமைச்சினை வகித்துவந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலஞ்சென்றதை அடுத்து அவரது அமைச்சு பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கீழ் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு,புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சு ,நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு, சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு உள்ளமை குறிப்பிடத்தக்கது.