ஆசியா நாடான ஆர்மீனியாவின் பிரதமர் நிகோல் பாஷினியனுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது சோதனையில் உறுதியாகியுள்ளது.
எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, நான் முன்னணி துறைகளை நேரில் சென்று காண திட்டமிட்டுள்ளதால் ஒரு சோதனை எடுக்க முடிவு செய்தேன் என்று ஆர்மீனியாவின் பிரதமர் நிகோல் பாஷினியன் பேஸ்புக் நேரடி வீடியோவின் போது கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், அவரது மொத்த குடும்பமும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மட்டும் 460 வழக்குகள் பதிவு செய்து ஆர்மீனியா அதன் மிகப்பெரிய தினசரி அதிகரிப்பைக் கண்டது.
ஆனால் பஷினியன் தனது அரசாங்கம் நாடு தழுவிய ஊரடங்கை பற்றி சிந்திக்கவில்லை என்று கூறினார்.
சுகாதார அதிகாரிகள் வகுத்துள்ள சமூக இடைவெளி மற்றும் பிற சுகாதார விதிகளை அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.
சுமார் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் ஆர்மீனியா நாட்டில் 9,000-க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகள் மற்றும் 131 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.