தேர்தலைப் பிற்போடும் தேவை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசனைகளுக்கமைய பொதுத் தேர்தல் விரைவில் நடாத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணிகள் மூலமாக இந்த மாதம் -20 ஆம் திகதி தேர்தலை நடாத்த முடியாது என நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளோம்.
தேர்தலை நடாத்துவதற்குப் பொருத்தமான தினத்தைத் தீர்மானிப்பது தொடர்பில் சட்ட ரீதியான தடைகள் ஆணைக் குழுவுக்கு ஏற்படுத்தாவிட்டால் வேறு தினத்தைத் தீர்மானிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.