அமெரிக்காவில் கருப்பினத்தவரைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் மரணத்தால் தான் பயந்து போய் விட்டதாக கூறியுள்ளார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்.
ஜார்ஜ் பிளாய்ட் மரணத்தை கண்டித்து உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்திலும் அமைதி போராட்டம் நடந்த நிலையில், டிவியில் தோன்றிய ஜெசிந்தா ஆர்டர்ன், போராடும் அனைவருடனும் நான் நிற்கிறேன். இது உண்மையில் பயங்கரம்.
நாம் பார்ப்பது, பார்த்துக் கொண்டிருப்பது பயங்கரம், நான் உண்மையில் பயந்து போய்விட்டேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் அமைதியான போராட்டத்தை நான் தடுக்க விரும்பவில்லை, அதேசமயம் சமூக விலகலோடு நடைபெறாததை கண்டிக்கிறேன்.
ஒரு நாடாக எங்கு அநீதி நடந்தாலும் நாம் அதற்காக எழுந்து நிற்போம் என தெரிவித்துள்ளார்.