அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் நடுரோட்டில் ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்ற கருப்பினத்தவரை முழுங்காலில் கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மினசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபொலிஸ் நகரில் இக்கொடூர சம்பவம் அரங்கேறியது.
இந்த இனவெறி தாக்குதலை கண்டித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.
இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள பப்பலோ நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் விரட்டியடித்தனர்.
அப்போது, திடீரென கார் ஒன்று பொலிஸ் குழு மத்தியில் பாய்ந்து ஏறிச்சென்றது. இதில் இரண்டு அதிகாரிகள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
BREAKING: Car runs into police officers during protest in Buffalo, New York; at least 2 injured pic.twitter.com/HDXJeh8W85
— BNO News (@BNONews) June 2, 2020
இதனிடையே, கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃபிலாய்டின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.