பொதுத்தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் உடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபன அச்சகர் கங்காணி கல்பனா தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 20 இலட்சம் வாக்கு சீட்டுகளை அச்சிட்டு தருமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
எனினும் பொதுத்தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றில் பரிசீலனைக்கு இடம் பெற்றதால் வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவில்லை.
பொதுத்தேர்தலை நடத்த முடியும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அச்சகர் கங்காணி கல்பனா தெரிவித்தார்.