கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் மோதல் சம்பவமொன்று இன்று முற்பகலில் இடம்பெற்றிருக்கிறது.
இந்த சம்பவத்தில் கைதியொருவர் காயமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிறு குற்றம் புரிந்த நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கைதிகள் இன்று காலை துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.