வவுனியா காத்தார்சின்னகுளம் நாலாம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து வீட்டிற்கு முன்பாக ஒன்று கூடிய அயலவர்கள் சந்தேகமடைந்து வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் வீட்டின் யன்னல் வழியாக உள்ளே பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக இருப்பதை அவதானித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கொழும்பு பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்கவர் என்றும் கூறப்படுகின்றது.
அத்துடன் குறித்த வீட்டில் அவர் வாடகைக்கு வசித்து வருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.