திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரதும் பெயர், விலாசம் குறிப்பிடப்பட்ட தரவு பத்திரம் ஒன்று சுகாதார பரிசோதகர்களிடம் வழங்கி முழுமையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹ தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பப்பட்டுள்ளது, இந்நிலையில், மக்களின் செயல்பாடுகளுக்கு தடங்கல் ஏற்படாத வகையில் சில முயற்சிகளை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைக்களுக்கு அமைய திருமண நிகழ்வுகள் இடம்பெறுகின்றதா என ஆராய்ந்து பார்ப்பதற்கு சுகாதார பரிசோதகர்களை கடமையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளப்பட்டுள்ளதென சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹ தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரதும் பெயர், விலாசம் குறிப்பிடப்பட்ட தரவு பத்திரம் ஒன்று சுகாதார பரிசோதகர்களிடம் வழங்கி முழுமையான அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
அதன் பின்னர் சுகாதார பரிசோதகர்கள் வழங்கும் ஆலோசனைக்கமைய திருமண நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். கலந்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை 100 பேருக்குள் மட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, திருமண நிகழ்வுகள் நடத்துவதற்காக நிபந்தனைகளுடன் அனுமதி கிடைக்கும் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குறித்த திருமண நிகழ்வில் மக்கள் சரியான அளவில் கலந்து கொண்டால் சுகாதார பாதுகாப்பு முறையை கடைபிடிக்க முடியும்.
எப்படியிருப்பினும் திருமண நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் இதுவரையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.