யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தரப்புக்கு இடையே நீடித்து வந்த மோதல் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வாள்வெட்டுச் சம்பவமாக மாறியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் – கோண்டாவில் காரைக்காலைச் சேர்ந்த குழுவொன்று மற்றொரு குழுவுக்கு நேற்று முன்தினம் தாக்கியுள்ளது.
அதற்குப் பழிதீர்க்கும் வகையில் நேற்று காரைக்காலைச் சேர்ந்த குழு மீது குறித்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதில் இளைஞர் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.