வெப்பமான வானிலை ஊரடங்கு மீறல்களைத் தூண்டியது என்று லண்டன் பொலிசார் கூறுகின்றனர்.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பொலிஸ் படையின் பகுப்பாய்வின்படி, ஊரடங்கை மீறும் மக்கள், வெப்பமான காலநிலை மற்றும் விடுமுறை காலங்களுக்கு இடையே வலுவான தொடர்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 27 முதல் மே 14 வரையிலான தரவுகளை லண்டன் பெருநகர காவல்துறை ஆய்வு செய்தனர். இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் 973 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு மற்றும் 36 பேர் லண்டனில் கைது செய்யப்பட்டனர்.
ஏப்ரல் தொடக்கத்தில் செயின்ட் ஜேம்ஸ் பூங்காவில் பொலிஸ் நடவடிக்கைகள் உச்சத்தை எட்டியது, வார இறுதி ஈஸ்டர் வங்கி விடுமுறை மற்றும் ஏப்ரல் 15 அன்று, வெப்பநிலை ஆறு டிகிரி உயர்ந்ததுடன் ஒத்துப்போனது.
ஆனால் உதவி ஆணையர் மார்க் சிம்மன்ஸ், அதிகாரிகள் தலையிட்டபோது ஒட்டுமொத்தமாக நல்ல இணக்கம் இருந்ததாகவும், குழுக்களாக ஒன்றுகூடுவது போன்ற மீறல்களுக்கு கடைசி முயற்சியாக மட்டுமே பொலிஸ் படைகளை பயன்படுத்துவதாகவும் வலியுறுத்தினார்.