சுவிட்சர்லாந்தின் Würenlos ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பச்சிளம் குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Würenlos ரயில் நிலையத்தில் புதனன்று பகல் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மண்டல பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ரயில் மோதி படுகாயமடைந்து பின்னர் மரணமடைந்த குழந்தையின் வயது வெறும் 22 மாதம் என தெரியவந்துள்ளது.
தந்தையே குழந்தையை ரயில் நிலையம் எடுத்து வந்துள்ளார். ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டு அவர் ரயில் வருகிறாதா என எட்டிப்பார்த்துள்ளார்.
இதில் அவரது கையில் இருந்து குழந்தை நழுவி ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. சம்பவத்தை அடுத்து குழந்தையின் அலறலும், தந்தை மற்றும் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளின் அலறலும் ஒருசேர எழுந்துள்ளது.
அதேவேளை Würenlos ரயில் நிலையத்தை நெருங்கிய ரயில் ஒன்று சாரதியின் சமயோசிதத்தால் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு முடியாமல் போயுள்ளது. இதனால் குழந்தை ரயிலில் சிக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த குழந்தையை ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் காயம் காரணமாக குழந்தை பரிதாபமாக மரணமடைந்துள்ளது என மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தற்போது அரசு தரப்பு விசாரணையை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.