லண்டனில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் கிழக்கு பகுதியில் இருக்கும் Wilmington Gardens-ல் நடண்ட துப்பாக்கிச் சூடு சம்பத்தால், பிற்பகல் உள்ளூர் நேரப்படி 2.15 மணியளவில் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் அழைக்கப்பட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விமான ஆம்புலன்ஸ் மற்றும் ஆயுதமேந்திய பொலிசார் விரைந்தனர். அங்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் காயமடைந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த நபர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
மற்றொரு நபரும் சிறிய அளவிலான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருடைய உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் யாரையும் கைது செய்யவில்லை. அங்கிருக்கும் குடியிருப்பாளர் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி மட்டும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதில் கார் இந்த சம்பவம் காரணமாக சுவர் ஒன்றில் மோதியது போன்று தெரிகிறது. இது துப்பாக்கியால் சுட்ட பின் நடந்ததா? அவர்கள் காரில் வந்தனரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
ஆனால், வீடியோ எடுக்கும் நபர், இவர்கள் மீது காரின் ஜன்னல் வழியாக சுடப்பட்டதாகவும், நான் அதிர்ச்சியில் உறைந்ததாகவும் கூறுகிறார்.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.