பிரித்தானியாவின் இங்கிலாந்தில் வரும் 15-ஆம் திகதி முதல் பொது போக்குவரத்துகளில் முகக்கவசம், அதாவது முக உறைகள் கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில், இதுவரை 281,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 39,904 பேர் உயிரிழந்துள்ளனர்.
நோயின் தீவிரம் தற்போது குறைந்துள்ளது போன்று தெரிந்தாலும், நாட்டில் தினந்தோறும், கொரோனாவால் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வரை உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் நாட்டில், ஊரடங்கு விதிகள் கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜூன் 15 முதல் இங்கிலாந்தில் பொதுப் போக்குவரத்தில் பயணிகளுக்கு முகம் மறைத்தல் கட்டாயமாக இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகம், Downing Street-ல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய போக்குவரத்துச் செயலாளர் Grant Shapps, இரயில்கள், பேருந்துகள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்தில் உள்ளவர்கள் தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களைப் பாதுகாக்க முகம் மறைப்புகளை அணிய வேண்டும்.
புதிய விதிமுறைகள் பயணத்தின் தேசிய ரயில் நிபந்தனைகள் மற்றும் பேருந்துகளுக்கான பொது சேவை வாகன விதிமுறைகளின் கீழ் அறிமுகப்படுத்தப்படும்.
இதற்கு பயணிகள் இணங்கள்வில்லை என்றால் அபராதம் விதிக்கப்படலாம். ஆனால் இதில் சிறிய குழந்தைகள், ஊனமுற்றோர் மற்றும் சுவாசக் கஷ்டம் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய நடவடிக்கைகள் இங்கிலாந்தில் மட்டுமே பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், நாங்கள் இந்த விதி மாற்றங்களை தேசிய பயண நிபந்தனைகள் மற்றும் பேருந்துகளுக்கான பொது சேவை வாகன விதிமுறைகளின் கீழ் செய்வோம்.
இதன் பொருள் நீங்கள் இந்த விதிக்கு கீழ் இணங்கவில்லை என்றால் உங்களுக்கு பயணம் மறுக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
பெரும்பான்மையான மக்கள் இதற்கு கட்டாயப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று நான் எதிர்பார்க்கிறேன், ஏனெனில் முகத்தை மூடுவது மற்றவர்களைப் பாதுகாக்க உதவுகிறது.
பெரும்பாலான மக்கள் இந்த நோயைத் தோற்கடிக்க உதவ விரும்புகிறார்கள். நிச்சயமாக முன்னணி ஊழியர்கள், பயணிகளுடன் தொடர்பு கொள்பவர்கள் கட்டாயமாக முகம் மறைப்புகளை அணிய வேண்டும்.
வரும் நாட்களில், தொழிற்சங்கங்கள், போக்குவரத்து ஆபரேட்டர்கள் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பொருட்கள் தங்களிடம் இருப்பதை உறுதி செய்வதற்கும், பொதுமக்களுக்கு உறுதியளிப்பதற்கும் அரசாங்கம் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.