கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது71) என்ற தந்தையே இன்றைய தினம் அவரது வீட்டில் உள்ள மரமொன்றில் ஏறியபோது கீழே வீழ்ந்து இறந்துள்ளார்.
வவுனியாவில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1204 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இவரது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக வைத்து இனந்தெரியாதோரால் கடத்திச்செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் 1200 ஆவது நாளன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.