கொரோனா வைரஸ் ஆண்களின் இனப்பெருக்க செயல்திறனையும் பாதிக்கலாம் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் Tufts பல்கலைக்கழகம் மற்றும் Gongii மருத்துவக்கல்லூரியின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஆண்களில் இனப்பெருக்க உறுப்பில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விந்தகத்தினுள் உயிரணுக்களை உற்பத்தி செய்யும் விந்துக்குழல்களில் இந்த கொரோனா வைரஸ் அசாதாரண மாற்றங்களை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.
இதனால் விந்தணு உற்பத்தி குறையலாம், அல்லது சுத்தமாக உயிரணுக்களே உற்பத்தியாகாமல் போகலாம் என அஞ்சப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போதும் பேசும்போதும் எச்சில் அல்லது சளியிலுள்ள துகள்கள் காற்றில் பரவுவதால் கொரோனா வைரஸ் பரவுவதாக முதலில் கருதப்பட்ட நிலையில், அது பாலுறவு மூலம் பரவுமா என கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளார்கள்.
இதுவரை கொரோனா வைரஸ் இனப்பெருக்க திரவங்களில் கண்டுபிடிக்கப்படவில்லையென்றாலும், ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் உள்ள செல்கள் வைரஸை ஏற்றுக்கொள்ளத்தக்க ACE2 receptorகளைக் கொண்டுள்ளதால், ஆண்கள் உயிரணு தானம் செய்யவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்னொரு பக்கம் ஸ்டீராய்டு சிகிச்சை, மாறும் வெப்பநிலை, ஆக்சிஜன் இன்மை மற்றும் ஏதோ ஒரு இரண்டாம் தொற்றுகூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
என்றாலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் கொரோனா வைரஸைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், அவர்கள் கொரோனாவிலிருந்து விடுபட்ட பின்னரும், பிற்காலத்தில் அவர்களுக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.