சுவிட்சர்லாந்தில் காப்பகம் ஒன்றில் வயதான பெண்மணி ஒருவரை விஷம் வைத்து கொல்ல முயன்ற இரு செவிலியர்கள் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
பாஸல் மண்டலத்தில் அமைந்துள்ள Rosengarten senior residence காப்பகத்திலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த 2018 செப்டம்பர் முதம் டிசம்பர் வரையான காலகட்டத்தில் குறித்த செவிலியர்களில் ஒருவர், தொடர்புடைய வயதான பெண்மணியை கொலை செய்ய முயன்றுள்ளனர். இன்னொருவர் அவருக்கு உதவியுள்ளார்.
பலமுறை இந்த முயற்சி நடந்துள்ளதாகவும், ஒருமுறை உணவில் விஷம் வைத்த நிலையிலும் குறித்த பெண்மணி, அந்த கொலை முயற்சியில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரு செவிலியர்களுக்கும் 31 மற்றும் 44 வயது எனவும், தற்போது வேலையைவிட்டு நீக்கப்பட்டுள்ள இருவரும் நீதிமன்ற விசாரணையை எதிர்பார்த்துள்ளனர்.
செவிலியர்கள் இருவரும் அந்த வயதான பெண்மணியின் நம்பிக்கையை பெற்ற பின்னர், அவரை கொள்ளையிட திட்டமிட்டுள்ளனர்.
அந்த வயதான பெண்மணியிடம் சுமார் 20,000 பிராங்குகள் வரை பணம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தொகையை அபகரிக்கும் நோக்கில், அவரை கொலை செய்ய முயன்றுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் காயமடைந்தாரா, கொலை முயற்சி எனக் கூறப்படுவது எப்படி என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் ஏதும் தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அரசு வக்கீல் அலுவலகம் மேலதிக விவரங்களை வெளியிட மறுத்துள்ளது.