அவுஸ்திரேலியாவில் உணவகத்தில் மேலாளராக பணிபுரிந்த நபர் கோடிக்கணக்கான பணத்தை கையாடல் செய்து மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
மெல்போர்னில் உள்ள மதுவிடுதியுடன் கூடிய உணவகத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் Scott Markworth.
அந்த உணவகத்தின் கணக்கு வழக்குகளையும் Scott தான் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் Scott நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் உணவகத்தின் உரிமையாளர் இது தொடர்பில் கண்காணித்தார்.
அப்போது அதிகளவில் பணம் கணக்கில் காட்டப்படாமல் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து Scott-யிடம் விசாரித்த போது தான் பணத்தை கையாடல் செய்ததை ஒப்பு கொண்டார்.
மேலும் ஒரு இடத்துக்கு சென்ற அவர் ஈரமான பையை கொண்டு வந்தார், அதற்குள் $326,000 பணம் இருந்தது.
ஏன் பை ஈரமாக இருந்தது என கேட்டதற்கு, அந்த பணத்தை யாருக்கும் தெரியாமல் மண்ணுக்குள் புதைத்து வைத்ததாக கூறி அதிரவைத்தார்.
இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் Scott-ஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
அப்போது நீதிபதி கூறுகையில், Scott செய்தது தவறு தான், ஆனால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படவில்லை, ஏனெனில் Scott கடுமையான மனநலப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் 250 மணிநேர ஊதியம் இல்லாத வேலையை செய்யவேண்டும், இதோடு இரண்டு ஆண்டுகள் சமூக திருத்த உத்தரவு தொடர்பான சேவையும் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.