ஜேர்மனியில் இருந்து வெளியேற்றப்படவுள்ள சில அமெரிக்க படைகள் மீண்டும் போலந்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று நம்புவதாக போலந்தின் பிரதமர் மேட்டூஸ் மொராவெக்கி கூறினார்.
ஜேர்மனியில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை தற்போது நிரந்தரமாக அங்கு நியமிக்கப்பட்டுள்ள 34,500 படைகளில் இருந்து 9,500 பேர் வெளியேற்றப்படுவார்கள் என கூறப்படுகிறது..
நாங்கள் நடத்திய பல பேச்சுவார்த்தைகளின் விளைவாக ஜேர்மனியில் இருந்த வெளியேற்றப்படும் சில அமெரிக்க படைகள் போலந்திற்கு வரும் என்று நம்புகிறேன்.
இப்போது அமெரிக்கா தான் முடிவெடுக்க வேண்டும் என்று போலந்தின் பிரதமர் மேட்டூஸ் மொராவெக்கி கூறினார்.