ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்திற்கு நீதி வேண்டிய பேரணியில் சிறுமி ஒருவரின் பங்கெடுப்பும், அவர் எழுப்பிய கேள்விகளும் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன.
கொரோனா அச்சுறுத்தலால் சிக்கி இருந்த அமெரிக்கா தற்போது ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்திற்கு நீதி வேண்டிக் கொதிக்கிறது. அமெரிக்காவின் வெள்ளைக் காவல் அதிகாரி ஒருவர் தனது முட்டியால் கழுத்தை அழுத்தி ஜார்ஜ் ஃபிளாய்டின் உயிரைப் பறித்தார்.
மூச்சு விட முடியவில்லை… கொலை செய்துவிடாதீர்கள் என்று ஃபிளாய்ட் அபயக்குரல் எழுப்பியும் அவரை அதிகாரி விடுவிக்கவில்லை.
இந்தக் கொடூர கொலைக்கு நீதி வேண்டி அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது கறுப்பின மக்களுக்கு எதிரான மனநிலையின் உச்சம் என அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
This little girl is among the #BlackLivesMattter protesters in #Merrick. More at #LIHerald tonight. pic.twitter.com/5E1rmD3KqJ
— Scott Brinton (@ScottBrinton1) June 3, 2020
வயது வித்தியாசமின்றி அமெரிக்க மக்கள் ஜார்ஜ் ஃபிளாய்டின் உயிருக்குப் பதில் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்திற்கு நீதி வேண்டிய பேரணியில் சிறுமி ஒருவரின் பங்கெடுப்பும், அவர் எழுப்பிய கேள்விகளும் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன
மிகுந்த கோபத்துடன் நீதி இல்லையென்றால் அமைதி இல்லை எனக் கோஷமிடும் அந்தச் சிறுமியின் வீடியோவை பல தரப்பைச் சேர்ந்தவர்களும் பகிர்ந்துள்ளனர்.
பல பிரபலங்கள் சிறுமியின் ரௌத்திர வீடியோவை பகிர்ந்து ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்திற்கு நீதி வேண்டிப் பதிவிட்டு வருகின்றனர்.



















