தமது இளம் வயதில் பல முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்கானதாக ஆர்காவ் மொடல் அஞ்சா லுயன்பெர்கர் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.
தற்போது 27 வயதாகும் அஞ்சா லுயன்பெர்கர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
உங்களை நீங்களே கண்டறிந்து உண்மையை உரக்கச் சொல்வதை விட விடுதலையும் ஊக்கமும் வேறில்லை என அதில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தாம் உரிய தருணத்திற்காக காத்திருந்ததாகவும், தற்போது இந்த கொரோனா ஊரடங்கால் அது சாத்தியமானது எனவும் தெரிவித்த அவர்,
தமக்கு நேர்ந்த துயரங்களை 48 பக்க புத்தகமாக வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொழில் நிமித்தம் பல ஆண்டுகளாக நியூயார்க் நகரில் வசித்துவரும் அஞ்சா, துரதிர்ஷ்டவசமாக, இசைவு என்றால் என்ன என்பது இன்னும் பலருக்கு தெளிவாகத் தெரியவில்லை என்றார்.
தமது இளம் வயதிலேயே இருமுறை தாம் பலாத்காரம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வுகளால் தன்னையே வெறுத்ததாக கூறும் அஞ்சா, அதில் இருந்து விடுபட தமக்கு பல ஆண்டுகள் செலவானது என்றார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஞ்சா குறிப்பிட்ட கருத்துகளுக்கு தற்போது பலரும் ஆதரவான பதிவுகளை பதிலாக அளித்து வருகின்றனர்.