சுகாதாரத்துறை வழங்கிய நெறிமுறைகளை அமுல்படுத்த பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.
அம்பலங்கொடையில் இன்று பொதுத்தேர்தலுக்கான ஆயத்தமாக ஒத்திகை பார்க்கப்பட்டது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.