யாழில் புளியங்கூடலில் உள்ள நடராஜா சிரஞ்சன் என்பவர் வீட்டில் ஒயில் பாம் மரம்(oil palm tree) காய்த்துள்ளது.
இதிலிருந்துதான் மரக்கறி எண்ணெய் என்று அறியப்படும் பாம் ஒயில் (palm oil & palm kernel oil) தயாரிக்கப்படுகிறது.
இம்மரம் 2012 ஆம் ஆண்டில் பரீட்சார்த்த முயற்சியாக நடப்பட்டது. தற்போது திடீரென்று காய்த்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இலங்கையர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.