திருகோணமலை மாவட்டம் கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தை சேர்ந்த அல் ஹாஜ். பீ. எம். ஜலால்தீன் வயது (75) என்பவர் மிகவும் சுவாரஸ்யமானவரும் மரநடுகையில் அதீத ஈடுபாடும் காட்டுபவர்.
இவருடைய தோட்டத்தில் பற்பல அரிதான மரங்கள் காணப்பட்டாலும் ஒரே மரத்தில் ஒரு தோட்டமே காணப்படுவதானது பார்ப்போரை அதிசயிக்க வைக்கிறது.
கனிதராத மாமரத்தில் 12 வகையான வித்தியாசமான மாவினங்களை ஒட்டு முறை செய்து சாதனை படைத்துள்ளார்.
அதில் அளவிலும் நிறத்திலும் பச்சை இன திராட்சையை ஒத்த வடிவில் குலைகுலையாக தொங்கும் அபூர்வ ரக மாங்கனிகளும் உள்ளன.
தற்கால விவசாயிகளுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக இந்த சாதனை திகழ்வதோடு, ஏனையோருக்கு தூண்டுதலாகவும் அமையும் எனலாம்.
குறித்த மா இனங்களை அப்பகுதிக்கு செல்லும் அதிகமானவர்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.