தென்கொரியாவுடனான அனைத்துவிதமான உறவுகளையும் துண்டிக்க வடகொரியா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.
தன்னுடைய அணு ஆயுத சோதனை மூலம் உலக நாடுகளையே மிரட்டி ஒரு நாடு என்றால் அது வடகொரியா தான், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மர்மங்கள் நிறைந்த நாடு, அந்நாட்டில் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன் ஒரு சர்வாதிகாரி என்றெல்லாம் கூறப்படுவதுண்டு.
இந்நிலையில், பக்கத்து நாடான தென்கொரியாவுடன் அனைத்துவிதமான உறவையும் துண்டிக்க வடகொரியா முடிவெடுத்துள்ளதாக அந்த நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.
கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில் ‘ வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவரின் சகோதரி கிம் யோ ஜாங் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழ துணைத் தலைவர் கிம் யோங் சோல் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் தென்கொரியா பற்றிய முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் தென்கொரியா நாட்டுக்கு ஒரு எதிரி நாட்டு அந்தஸதை கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்து.
தென் கொரிய அதிகாரிகளின் துரோகம் மற்றும் தந்திரமான நடத்தையால் வடகொரிய மக்கள் கோபமடைந்துள்ளனர்.
வடகெரியாவின் உச்ச தலைமையின் மாண்பை காப்பாற்றும் வகையில் தென்கொரியா நடந்து கொள்ளவில்லை. இனிமேல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவுமே இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாகவே தென்கொரியாவுடன் அனைத்து உறவுகளையும் துண்டிப்போம், எல்லையை மூடிவிடுவோம் என்று வடகொரியா மிரட்டி வந்தது.
வடகொரியா தென் கொரியாவுடன் உறவை துண்டிப்பதன் முதல் கட்ட அடையாளமாக இரு நாட்டு இராணுவம், மற்றும் வடகெரியா அதிபர், தென்கொரிய பிரதமர் அலுவலகத்துக்கிடையே இருந்த ஹாட்லைன் இணைப்புகள் இன்று துண்டிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாக தென்கொரியாவிலிருந்து முதன்முதலில் செய்திகள் வெளியானது. இதையடுத்து, வடகொரிய அதிபருக்கு தென்கொரியா மீது கோபம் உருவாயிகிருக்கலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.