தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களும் எம்முடன் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றார்களோ அவ்வளவு விரைவாக தீர்வை நாம் காணமுடியும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்களித்த நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் புதிய நாடாளுமன்றத்தில் பேச்சுக்களை ஆரம்பிப்போம். அந்தப் பேச்சுகளின் பிரகாரம் அரசியல் தீர்வு தொடர்பான திட்ட வரைவு தயாரிக்கப்படும்.
புதிய நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். இதுவே அரசியல் தீர்வு தொடர்பான என்னுடையதும் எனது அரசினதும் நிலைப்பாடாக இருக்கின்றது.
இதேவேளை, தமிழ் மக்களுக்குத் தீர்வை நாம்தான் வழங்க வேண்டும். வெளிநாடுகள் வந்து தீர்வு தரும் என்று எவரும் நம்பக்கூடாது. ஏனெனில் இது உள்நாட்டுப் பிரச்சினை. நாம்தான் பேசித் தீர்க்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களும் எம்முடன் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றார்களோ அவ்வளவு விரைவாக தீர்வை நாம் காணமுடியும்.
ஒற்றுமையாக – நெருக்கமாக இருந்தால்தான் எதனையும் சாதிக்க முடியும். முரண்பட்டு நின்றால் எந்தப் பயனும் இல்லை என்றார்.